நான்!
வணக்கம்! நான் லோகநாதன்.
நான் மோஷன் கிராபிக் டிசைனராக கடந்த 5 ஆண்டுகள் Cognizant, Foodhub, Glance போன்ற கம்பெனிகளில் பணிபுரிந்திருக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் நான் மோஷன் கிராபிக் பற்றி தெரிந்துகொண்ட விஷயங்களை இந்த கோர்ஸில் விடீயோக்களாக பதிவு செய்துள்ளேன். என்னை பற்றி மேலும் தெரிந்துகொள்ள உடெமி ப்ரொபைல் பக்கத்தைப் பார்க்கவும்.
ஏன்?
இந்த கோர்ஸில் இணைவதனால் நீங்கள் உங்கள் வீடியோ மற்றும் அனிமேஷன் திறமைகைளை வளர்த்துக்கொள்ளவும் புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவும் முடியும். இந்த கோர்ஸ் வெறும் காணொளிகளை பார்க்கமட்டுமல்லாமல் நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும் அதை பயிற்சி செய்து பார்க்கவும் எளிமையான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றும் நீங்கள் கற்றுக்கொண்டு உருவாகும் விடீயோக்களை இங்கே பதிவு செய்து அதற்கு அறிவுரைகளை என்னிடம் Udemy directing messagingயில் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
எதற்கு?
நீங்கள் உண்மையாகவே 2D அனிமேஷன் மற்றும் மோஷன் கிராபிக்ஸ் துறையில் கற்றுக்கொண்டு புதிய விஷயங்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் இந்த கோர்ஸ் உங்களுக்காகவே வடிவமைக்க பட்டதுதான்.
யார்?
நீங்கள் ஆப்ட்டர் எபக்ட்ஸ் பற்றி துளியும் கூட தெரியாதவராக இருந்தாலும் சரி அல்லது வேறு ஏதும் வேலையிலோ அல்லது துறையில் இருந்து அனிமேஷன் துறைக்குள் வந்து கற்றுக்கொண்டு சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவராக இருந்தாலும் சரி இந்த கோர்ஸ் உங்களுக்கு மிகவும் கை கொடுக்கும்
எப்படி?
இந்த கோர்ஸ்ஐ எந்த தடையுமின்றி தொடர உங்களுக்கு தேவையானது ஒரு லேப்டாப்/கம்ப்யூட்டர், Adobe After Effects software. இந்த ரெண்டு விஷயங்களும் உங்களிடம் இருந்தால் அதன்பிறகு சிறிது நேரம் மட்டும் செலவு செய்து இந்த கோர்ஸில் சொல்லியிருக்கும் விஷயங்களை செய்திர்கள் என்றல் அதன்பிறகு உங்களுக்கே இந்த மென்பொருள் எவ்வளவு எளிமையானது என்பது புரிந்து விடும்.
கேள்வி?
உங்களுக்கு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் இந்த கோர்ஸ் கீழ் கமெண்ட் செய்யுங்கள். நான் என்னால் முடிந்த வரை உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன். அதே போல் நீங்கள் இந்த கோர்ஸ் முடிவில் உருவாக்கும் விடீயோக்களை மறக்காமல் கீலே upload அல்லது attach செய்யுங்கள். இது எனக்கும் இதர மாணவர்களுக்கும் ஒரு உந்துதலாக இருக்கும்.