தமிழ் டைப்பிங் ஏன் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்?
இன்றைய காலக்கட்டத்தில் கம்ப்யூட்டர் பயன்பாடு இல்லாத இடம் இல்லை. இணையதளம் பயன்படுத்தாதவர்களும் இல்லை. அதில் தங்கள் எண்ணங்களை தமிழில் பதிவிட நினைத்தாலும் தமிழ் டைப்பிங் தெரியாமல் அவர்களாகவே குருக்கு வழியை நாடுகிறார்கள். அது ஒரு முழுமையான பயிற்சியே அல்ல. அவர்களால் ஒரு டாக்குமென்டை முழுமையாக உருவாக்க இயலாது. ஆனால் இந்த பயிற்சியில் முறையாக தமிழ் டைப்பிங் கற்றுக் கொண்டு எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.
இங்கிலீஷ் டைப்பிங் பல பேர் கற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழ் டைப்பிங் படித்தால் இழுக்கு என நினைத்த காலங்களும் உண்டு. அதனால் தற்பொழது தமிழ் டைப்பிங் தெரியாமல் பலபேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்க கூடிய வேலை வாய்ப்புகளும் கிடைக்காமல் போய் விடுகிறது. தற்பொழது டைப் ரைட்டிங் மிஷின்களும் சொல்லி தர இல்லை என்பது நிதர்சனமான உண்மை. டைப் பள்ளிகளில் சென்றாலும் சில பள்ளிகளில் மிஷின் பற்றாகுறையால் சொல்லி தருவதுமில்லை. இவற்றை போக்கவே ஆன்லைனில் பாடதிட்டங்கள் வகுத்து தந்துள்ளேன்.
அரசாங்க பணிகளுக்கு தற்பொழது தமிழ் டைப்பிங் அதிக அளவு தேவை படுகிறது. இப்பயற்சியை மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும்யில்லை.
இப்பாடத்தை பயன்படுத்தி தங்கள் துறையில் மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன். மேலும் இந்த பயிற்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் பட்சித்தில் உங்கள் நண்பர்களுக்கு பரிதுரை செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
தமிழ் டைப்பிங் அரசாங்க சான்றிதழ் பெருவதற்கான வழிமுறைகளும் கூடிய விரைவில் இணைத்து விடுவோம். அதன் மூலம் தாங்கள் தனியார் வேலைக்கும் மற்றும் அரசாங்க வேலைக்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.
தமிழ் டைப்பிங் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய பயிற்சி என்பதை உணருங்கள். இப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் .
நன்றி
இப்படிக்கு
க சிவா