Google AdSense என்பது bloggers-களுக்கு வருமானம் ஈட்ட வழிவகை செய்யும் Google-ன் ஒரு விளம்பர நெட்ஒர்க் தளமாகும். நீங்கள் ஒரு முழுநேர வேலை அல்லது தொழில் செய்ய ஆர்வம் உள்ளவராக இருந்தாலோ, அல்லது பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தாலோ, ஆன்லைனில் எளிய வழியில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்தால் மட்டும் போதும்.
இந்த கோர்ஸ் எனது கிட்டத்தட்ட 20 வருடங்களின் அனுபவத்தில் உருவாக்கப்பட்டது. 2006-ல் தொடங்கியது என்னுடைய Google AdSense பயணம். பின்னர் ஒவ்வொரு மாறுதலுக்கும் என்னை உட்படுத்திக்கொண்டு பிளாக்கிங் மூலம் வருமானம் ஈட்டுவதை என்னுடைய தொடர் தொழிலாக கொண்டுவந்துள்ளேன்.
இந்த கோர்ஸ்-ல், என்னுடைய முழு அனுபவங்களையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் கற்பித்துள்ளேன். இது வெறும் பாடம் அல்ல, என்னுடைய laptop-ல் நான் எப்படி வேலை செய்வேனோ, அதையே உங்களுக்கும் பதிவு செய்து, எனது வாய்வழி கற்பித்தல் மற்றும் வீடியோ பயிற்சி மூலம் சிறப்பாக சொல்லி கொடுத்துள்ளேன்.
நீங்கள், online-ற்கு மிகவும் புதியவராக இருந்தாலும் உங்களால் மிக எளிதாக step-by-step கற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒவ்வொரு பாடமாகவும், ஒவ்வொரு படியாகவும் மிகவும் practical-ளாக பயிற்சி தந்துள்ளேன்.
மிக முக்கியமாக, ChatGPT பயன்படுத்தி contents எழுதலாமா என பலரும் கேட்கிறார்கள். தாராளமாக பயன்படுத்தலாம், ஆனால் நீங்க சராசரியாக ChatGPT யை பயன்படுத்தவதுபோல் இல்லாமல் இதற்கென்று கற்றுக்கொடுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றினால், நிச்சயம் உங்கள் AdSense அக்கௌன்ட் approve ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேற்படி உங்களுக்கு இந்த பணம் சம்பாதிக்க கூடிய AdSense வகுப்பில், எந்த சந்தேகம், இருந்தாலும் என்னை தொடர்புகொண்டு கேட்கலாம். நீங்கள் பிளாக்கிங் உருவாக்க தொடங்குவதற்கு முன்னர், எந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும், பின்னர் இந்த பிளாக்கிங் மூலம் எப்படி பணம் சம்பாதிப்பது. தேவைப்பட்டால், உங்களுடைய blog-ஐ எப்படி நல்ல விலைக்கு online market-ல் எப்படி விற்பது போன்ற செய்முறைகள் வரை சரியாக என்னுடைய அனுபவத்தை இங்கே சொல்லி தந்துள்ளேன்.
படித்து, பயிற்சி செய்து online-ல் உங்களுக்கான ஒரு அசாத்திய திறமையை சிறப்பான முறையில் கற்றுக்கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்.