What You Will Learn!

  • Property safe
  • How to buy a headache-free property
  • Property purchase
  • Asset

Description

நிலத்தின் நலமறிய ஆவல்

தலைப்பு:

வில்லங்கம் இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி?

ஒரு நாள் பயிற்சி பாசறை

இடம்:

பத்மசாலியர் திருமண மண்டபம், தென் கீரனூர்-கள்ளகுறிஞ்ச்சி

நாள்:14.08.2021


பயிற்சி கையேடு

ஆசிரியர் : சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

முன்னெடுப்பு

நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை

No.33, மருதுபாண்டியர் சாலை, காமராஜபுரம், வேளச்சேரி சென்னை – 600 042.

பாடத்திட்ட உருவாக்கம்

பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி

எண்103/1,இல்லத்தார் வடக்கு தெரு, முத்துகிருஷ்ணாபுரம், கடையநல்லூர், தென்காசி மாவட்டம், பின்:627751 செல்:9962265834


உங்கள் மனை நகர் புற நில உச்சவரம்பா (ULT)
தெரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!


1. ஒருவருக்கே குவிந்து விடுகின்ற நில உரிமைகள் காரணமாக தமிழத்தில் பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்ததை போக்கவும், நகர்ப் புறத்தில் நிலங்களை யாரும் ஒரு தனி நபர் தன் கைப் பற்றில் வைக்கக் கூடாது என்ற நோக்கின் 1976-ல் மத்திய அரசும், 1978ல் தமிழ்நாடு அரசும் இந்த நகர்ப் புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவந்தன.

2. சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் போன்ற நகர பகுதிகளின் வெளியே! எதிர் காலத்தில் விலைகள் உயரும் என்று கருதப்பட்ட இடங்களில், ஊருக்கு ஏற்றார்போல் 5 சண்டிற்கு மேல் அல்லது 3 சென்டிற்கு மேல் காலி மனைகளை வைத்துக் கொள்ளகூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது.

3. சிலபகுதிகளில் 10 செண்ட் பரப்பு வரை கூடவைத்து இருக்கலாம். இவை இடத்திற்கும் சூழலுக்கும் எற்றாற்போல (Case by case) வைத்திருக்கின்ற நிலப்பரப்புகள் மாறவாய்ப்பு இருக்கிறது. அப்படி நகர்ப்புற நில உச்சவரம்பிற்கு மேல் இருக்கும் மிகை நிலங்களை அரசே கையகப்படுத்திகொள்ளும்.

4. இந்தசட்டத்தின்கீழ் 2,381 சதுரஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக 250க்கும் மேற்பட்ட சதுர ஹெக்டேர் நிலங்கள் வழக்குகளாக நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் இருக்கின்றது.

5. 300-க்கும் மேற்பட்ட சதுரஹெக்டேர் நிலங்களை அரசே தனது பலதுறைகளின் திட்டங்களுக்கு கைப்பற்றி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல சதுரஹெக்டேர் நிலங்கள் உச்சவரம்பு சட்டத்திற்குள் வந்தாலும் மக்கள் அதனை கைப்பற்றி இன்றுவரை அனுபவித்துவருகின்றனர்.

6. மேற்படிமக்கள்கைப் பற்றி அனுபவித்து வரும் நகர்ப்புறநில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்களை, வெவ்வேறு நபர்களுக்கு விவரம் தெரியாமல் கிரையம் செய்து கைமாற்றி விட்டுவிட்டனர். (ஏன் பத்திரம் அலுவலகத்தில் பத்திரம்பதிவு செய்தார்கள்? என்று கேட்காதீர்கள். அந்தகாலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும், நில சீர்திருத்தத்துறைக்கும் பெரிய அளவில் தகவல் தொடர்புகள் இல்லை. அதனால் நிறைய கிரையப்பத்திரங்களாக பதிவுத்துறை நிலஉச்சவரம்பு நிலங்களை பதிந்துவிட்டது.)

7. இதுபோல் நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்கள் பலகைகளுக்கு மாறி, அவை வீடுகளாக, கடைகளாக, அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறி நிற்கிறது. மேற்படி இடங்களை எல்லாம் தெரிந்து வாங்கியவர்கள், தெரியாமல் வாங்கியவர்கள் என்று பலநடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில்பெருந்தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.

8. அரசு நகர்ப்புற நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ்நிலங்களை கையகப்படுத்திவிட்டு அதில் வாங்குவதும் விற்பதுமான கிரையங்களை பதிவுத் துறை எப்படி அனுமதிக்கலாம்? என்று கண்டித்துமேற்படிகிரைய ஆவணங்களை எல்லாம் செல்லாது என நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

9. 2008-ல், 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் என புதிய சட்டத்தை கொண்டு வந்து அரசின் நிலஉச்சவரம்பு இடங்களைவைத்து இருப்பவர்களை, குடியிருப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட தொகை பெற்று வரன் முறை செய்து அந்த நிலத்தை மக்களே சொந்தமாக்கிக் கொள்ள அரசுஆணை பிறபித்தது.

10. பலநிலஉச்சவரம்புநிலங்களை 1.5 கிரவுண்டுக்கு உட்பட்டு அதில் கிரையம் பெற்றவர்களை விவரம் தெரியாமல் வாங்கியவர்களுக்கு மட்டும் (Innocent Buyer) என்று வரன் முறைப்படுத்தி நகர்ப்புறநில உச்சவரம்பு சட்டத்தை உடைத்து இருப்பார்கள். மேற்படிச் சொத்துக்களை கிரையம் செய்யும் போது மிககவனத்துடன் வாங்குதல் வேண்டும்.

11. நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்துக்கு உட்பட்டமனை களைவரன் முறைப்படுத்த மேற்படிசட்டம் அமலுக்கு வந்தநாள் முதல் 1994 டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிரையம் பெற்று இருக்கும் நிலங்களுக்குதான் இவை பொருந்தும்.

12. தமிழ்நாடு அரசு வரன் முறைப்படுத்துதலில் முதலில் காட்டிய வேகம் இப்பொழுது இல்லை. இதனால் பலமனுக்கள் இன்னும் கிடப்பிலேயே இருக்கின்றன.

13. 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த பிறகு அதனை ஆய்வு செய்து எல்லா நிலத்திற்கு ஒரே சமயத்தில் உத்தரவிடலாம் என்று நான் சென்னை, ஆலந்தூரில் இருக்கும் அலுவலகத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்காக சென்ற போது சொன்னார்கள். (சொன்னது தான் அதுவும் நடந்தபாடில்லை)

14. உங்கள் நிலம் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இருந்தால்கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்றுகுறிப்பிடப்பட்டு இருக்கும். அது சம்பந்தமாக ஏதாவது வழக்கு இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடபட்டு இருக்க வேண்டும்.

15. மேற்படி நில உச்சவரம்பிலுள்ள நிலத்தைவரன் முறைப்படுத்த 1976-லிருந்து வில்லங்க சான்றிதழ் எடுக்க வேண்டும்.

16. பல வருடங்கள் ஆகியும் வரன் முறைபடுத்துதல் முடிந்தபாடில்லை. நிலஉச்சவரம்பு வரன் முறைப்படுத்து தலைமுழுமையாக முடித்து விட்டால் அரசுக்கு புண்ணியமாகபோகும் என்று பொது மக்கள் சொல்கிறார்கள்.

17. கிரையப்பத்திரம், தாய்ப்பத்திரம் பட்டா போன்ற அனைத்து ஆவணங்களின் நகல்களும், பில்டிங்பிளான் இருந்தால் பில்டிங்பிளானும் அதனுடன் 100 ரூபாய் நீதிமன்ற முத்திரை (ரெகுலர் முத்திரைதாள் அல்ல) தாளில் நகர்ப்புற நில உச்சவரம்பிற்குமனு செய்ய வேண்டும்.

18. இப்பொழுதெல்லாம் நகர்புறநில உச்சவரம்பு சட்டத்தை உடைப்பதென்றால், சென்னையில் இருக்கின்ற அம்பத்தூர், ஆலந்தூர், குன்றத்தூர், எழும்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், தி.நர், பூந்தமல்லி, மைலாப்பூர், மாதவரம் ஆகிய இடங்களில் இருக்கின்றநகர்புற நிலவரி உதவி ஆணையர் அலுவலகத்திலும், திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் நகர்புற உதவி ஆணையர் அலுவலகத்திலும். சென்னை சேப்பாக்கத்தில் இருக்கின்ற நகர்புறநிலவரி ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று நிலவரியைக் செலுத்தி ஜார்ஜ் கோட்டை வரை சென்று உச்சவரம்பு சட்டத்தை உடைக்க வேண்டி இருக்கிறது.

Who Should Attend!

  • Leaning different type of land

TAKE THIS COURSE

Tags

Subscribers

0

Lectures

6

TAKE THIS COURSE