பிரதிபலிப்பியல் ஒரு பாரம்பரிய மருத்துவமுறையாகும். இது மருந்தில்லா மருத்துவமுறையுமாகும். பிரதிபலிப்பியல் உங்கள் உடலில் ஏற்படும் நோய்களையும் பிரச்சினைகளையும் கண்டறிய உதவுகிறது. மேலும் இது ஒரு அரிய சிகிச்சைமுறையுமாகும். இது உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சில இடங்களில் நோயின் பிரதிப்பலிப்பாக வலியாகக் காணப்படும். இதனை அடையாளம் கண்டு நுண்ணழுத்தம் கொடுத்து உங்கள் பிரச்சினைகளை நீங்களேகுணமாக்கலாம். இந்த கல்வி முழுவதும் தமிழ் மொழியில் கற்று தரப்பட்டுள்ளது. இது இரண்டு நிலைகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. முதல் நிலையில், ஒவ்வொரு புள்ளியிலும் ஏற்பட்டு இருக்கும் வலியை வைத்து நோயை அடையாளம் கண்டு கொள்ளலாம். இரண்டாவது நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளிகளில் வலி ஏற்பட்டு இருந்தால் அது என்ன பிரச்சினை அல்லது என்ன நோய் என்று அறிந்து கொள்ளலாம். நம் உடலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் சுரப்பிகளுக்கும் உள்ள பிரச்சினையை உள்ளங்கை மற்றும் கால்களில் வலியாக பிரதிபலிப்பதால் இது பிரதிபலிப்பியல் எனப்படுகிறது. முதல் நிலையில் 9 வகுப்புகள் உள்ளன. இரண்டாம் நிலையில் 6 வகுப்புகள் உள்ளன. அனைத்து வகுப்புகளும் தமிழில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டு நிலையிலும் உள்ள அனைத்து வகுப்புகளுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் தெளிவான படங்கள் தரப்பட்டுள்ளன. வகுப்புகளுக்கு நடுவே எளிமையாக புரிந்து கொள்ள சில உதாரணங்களும் விளக்கப்பட்டுள்ளது. இது கற்றுக் கொள்பவர்களுக்கு சுலபமான முறையில் பிரதிபலிப்பியலின் தத்துவத்தை புரிந்து கொள்ள உதவும். இந்த கல்வியை நீங்கள் 3 மணி நேரத்தில் கற்றுக் கொள்ளலாம். உடனடியாக நீங்களே உங்களை பரிசோதித்து உங்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். சிகிச்சையை உங்களுக்கு நீங்களே தந்து கொள்ளலாம். எப்படி சிகிச்சை அளிப்பது என்றும் எவ்வளவு நேரம் அளிப்பது என்றும் நன்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த பிரதிபலிப்பியல் கல்வியை பதினைந்து வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் வகுப்புகள் சுலபமானதாக உள்ளன. இது தவிர மாணவர்கள் இந்த வகுப்புகள் குறித்து எழுப்பும் சந்தேகங்கள் அனைத்திற்கும் ஆசிரியர் விளக்கமளிக்கிறார். உடனடியாக பிரதிப்பியல் கல்வியில் சேருங்கள். விரைவாகக் கற்று பயன் பெறுங்கள்!