நிலத்தின் நலமறிய ஆவல்
தலைப்பு:
வில்லங்கம் இல்லாத சொத்துக்கள் வாங்குவது எப்படி?
ஒரு நாள் பயிற்சி பாசறை
இடம்:
பத்மசாலியர் திருமண மண்டபம், தென் கீரனூர்-கள்ளகுறிஞ்ச்சி
நாள்:14.08.2021
பயிற்சி கையேடு
ஆசிரியர் : சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
முன்னெடுப்பு
நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறகட்டளை
No.33, மருதுபாண்டியர் சாலை, காமராஜபுரம், வேளச்சேரி சென்னை – 600 042.
பாடத்திட்ட உருவாக்கம்
பிராப்தம் ரியல்எஸ்டேட் அகடமி
எண்103/1,இல்லத்தார் வடக்கு தெரு, முத்துகிருஷ்ணாபுரம், கடையநல்லூர், தென்காசி மாவட்டம், பின்:627751 செல்:9962265834
உங்கள் மனை நகர் புற நில உச்சவரம்பா (ULT)
தெரிந்து கொள்ள வேண்டிய 18 செய்திகள்!!
1. ஒருவருக்கே குவிந்து விடுகின்ற நில உரிமைகள் காரணமாக தமிழத்தில் பல பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருந்ததை போக்கவும், நகர்ப் புறத்தில் நிலங்களை யாரும் ஒரு தனி நபர் தன் கைப் பற்றில் வைக்கக் கூடாது என்ற நோக்கின் 1976-ல் மத்திய அரசும், 1978ல் தமிழ்நாடு அரசும் இந்த நகர்ப் புற நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவந்தன.
2. சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் போன்ற நகர பகுதிகளின் வெளியே! எதிர் காலத்தில் விலைகள் உயரும் என்று கருதப்பட்ட இடங்களில், ஊருக்கு ஏற்றார்போல் 5 சண்டிற்கு மேல் அல்லது 3 சென்டிற்கு மேல் காலி மனைகளை வைத்துக் கொள்ளகூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது.
3. சிலபகுதிகளில் 10 செண்ட் பரப்பு வரை கூடவைத்து இருக்கலாம். இவை இடத்திற்கும் சூழலுக்கும் எற்றாற்போல (Case by case) வைத்திருக்கின்ற நிலப்பரப்புகள் மாறவாய்ப்பு இருக்கிறது. அப்படி நகர்ப்புற நில உச்சவரம்பிற்கு மேல் இருக்கும் மிகை நிலங்களை அரசே கையகப்படுத்திகொள்ளும்.
4. இந்தசட்டத்தின்கீழ் 2,381 சதுரஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக 250க்கும் மேற்பட்ட சதுர ஹெக்டேர் நிலங்கள் வழக்குகளாக நீதிமன்றத்தில் இன்றளவும் நிலுவையில் இருக்கின்றது.
5. 300-க்கும் மேற்பட்ட சதுரஹெக்டேர் நிலங்களை அரசே தனது பலதுறைகளின் திட்டங்களுக்கு கைப்பற்றி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல சதுரஹெக்டேர் நிலங்கள் உச்சவரம்பு சட்டத்திற்குள் வந்தாலும் மக்கள் அதனை கைப்பற்றி இன்றுவரை அனுபவித்துவருகின்றனர்.
6. மேற்படிமக்கள்கைப் பற்றி அனுபவித்து வரும் நகர்ப்புறநில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்களை, வெவ்வேறு நபர்களுக்கு விவரம் தெரியாமல் கிரையம் செய்து கைமாற்றி விட்டுவிட்டனர். (ஏன் பத்திரம் அலுவலகத்தில் பத்திரம்பதிவு செய்தார்கள்? என்று கேட்காதீர்கள். அந்தகாலத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கும், நில சீர்திருத்தத்துறைக்கும் பெரிய அளவில் தகவல் தொடர்புகள் இல்லை. அதனால் நிறைய கிரையப்பத்திரங்களாக பதிவுத்துறை நிலஉச்சவரம்பு நிலங்களை பதிந்துவிட்டது.)
7. இதுபோல் நகர்ப்புற உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ள நிலங்கள் பலகைகளுக்கு மாறி, அவை வீடுகளாக, கடைகளாக, அடுக்கு மாடி குடியிருப்புகளாக மாறி நிற்கிறது. மேற்படி இடங்களை எல்லாம் தெரிந்து வாங்கியவர்கள், தெரியாமல் வாங்கியவர்கள் என்று பலநடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள்தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில்பெருந்தொகை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள்.
8. அரசு நகர்ப்புற நிலஉச்சவரம்பு சட்டத்தின் கீழ்நிலங்களை கையகப்படுத்திவிட்டு அதில் வாங்குவதும் விற்பதுமான கிரையங்களை பதிவுத் துறை எப்படி அனுமதிக்கலாம்? என்று கண்டித்துமேற்படிகிரைய ஆவணங்களை எல்லாம் செல்லாது என நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளது.
9. 2008-ல், 1978-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் முறைப்படுத்துதல் என புதிய சட்டத்தை கொண்டு வந்து அரசின் நிலஉச்சவரம்பு இடங்களைவைத்து இருப்பவர்களை, குடியிருப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட தொகை பெற்று வரன் முறை செய்து அந்த நிலத்தை மக்களே சொந்தமாக்கிக் கொள்ள அரசுஆணை பிறபித்தது.
10. பலநிலஉச்சவரம்புநிலங்களை 1.5 கிரவுண்டுக்கு உட்பட்டு அதில் கிரையம் பெற்றவர்களை விவரம் தெரியாமல் வாங்கியவர்களுக்கு மட்டும் (Innocent Buyer) என்று வரன் முறைப்படுத்தி நகர்ப்புறநில உச்சவரம்பு சட்டத்தை உடைத்து இருப்பார்கள். மேற்படிச் சொத்துக்களை கிரையம் செய்யும் போது மிககவனத்துடன் வாங்குதல் வேண்டும்.
11. நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்துக்கு உட்பட்டமனை களைவரன் முறைப்படுத்த மேற்படிசட்டம் அமலுக்கு வந்தநாள் முதல் 1994 டிசம்பர் 31 ஆம் தேதி வரை கிரையம் பெற்று இருக்கும் நிலங்களுக்குதான் இவை பொருந்தும்.
12. தமிழ்நாடு அரசு வரன் முறைப்படுத்துதலில் முதலில் காட்டிய வேகம் இப்பொழுது இல்லை. இதனால் பலமனுக்கள் இன்னும் கிடப்பிலேயே இருக்கின்றன.
13. 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த பிறகு அதனை ஆய்வு செய்து எல்லா நிலத்திற்கு ஒரே சமயத்தில் உத்தரவிடலாம் என்று நான் சென்னை, ஆலந்தூரில் இருக்கும் அலுவலகத்திற்கு ஒரு வாடிக்கையாளருக்காக சென்ற போது சொன்னார்கள். (சொன்னது தான் அதுவும் நடந்தபாடில்லை)
14. உங்கள் நிலம் உச்சவரம்பு சட்டத்தின் கீழ் இருந்தால்கிராம கணக்கில் ULT (Urban Land Tax) என்றுகுறிப்பிடப்பட்டு இருக்கும். அது சம்பந்தமாக ஏதாவது வழக்கு இருந்தால் நீதிமன்ற ஆணை எண் குறிப்பிடபட்டு இருக்க வேண்டும்.
15. மேற்படி நில உச்சவரம்பிலுள்ள நிலத்தைவரன் முறைப்படுத்த 1976-லிருந்து வில்லங்க சான்றிதழ் எடுக்க வேண்டும்.
16. பல வருடங்கள் ஆகியும் வரன் முறைபடுத்துதல் முடிந்தபாடில்லை. நிலஉச்சவரம்பு வரன் முறைப்படுத்து தலைமுழுமையாக முடித்து விட்டால் அரசுக்கு புண்ணியமாகபோகும் என்று பொது மக்கள் சொல்கிறார்கள்.
17. கிரையப்பத்திரம், தாய்ப்பத்திரம் பட்டா போன்ற அனைத்து ஆவணங்களின் நகல்களும், பில்டிங்பிளான் இருந்தால் பில்டிங்பிளானும் அதனுடன் 100 ரூபாய் நீதிமன்ற முத்திரை (ரெகுலர் முத்திரைதாள் அல்ல) தாளில் நகர்ப்புற நில உச்சவரம்பிற்குமனு செய்ய வேண்டும்.
18. இப்பொழுதெல்லாம் நகர்புறநில உச்சவரம்பு சட்டத்தை உடைப்பதென்றால், சென்னையில் இருக்கின்ற அம்பத்தூர், ஆலந்தூர், குன்றத்தூர், எழும்பூர், தண்டையார்பேட்டை, தாம்பரம், தி.நர், பூந்தமல்லி, மைலாப்பூர், மாதவரம் ஆகிய இடங்களில் இருக்கின்றநகர்புற நிலவரி உதவி ஆணையர் அலுவலகத்திலும், திருச்சி மற்றும் கோயம்புத்தூரில் இருக்கும் நகர்புற உதவி ஆணையர் அலுவலகத்திலும். சென்னை சேப்பாக்கத்தில் இருக்கின்ற நகர்புறநிலவரி ஆணையர் அலுவலகத்திற்கும் சென்று நிலவரியைக் செலுத்தி ஜார்ஜ் கோட்டை வரை சென்று உச்சவரம்பு சட்டத்தை உடைக்க வேண்டி இருக்கிறது.
உங்கள் நிலங்கள்உபரிநில உச்சவரம்பில் சட்டத்தின் கீழ் உள்ள? தெரியவேண்டிய 17 செய்திகள்!
1. நிலஉச்சவரம்பு சட்டம் 1961 என்பது நிலக்கிழார் குடும்பங்கள், ஜமீன்கள், நிறுவனங்கள், பொது அறக்கட்டளைகள், தனியார் அறக்கட்டளைகள், சொசைட்டி, நிறுவனங்கள் ஆகியோர் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் சொத்துக்கள்வைத்து இருக்கக்கூடாது என்று வரன்முறைப்படுத்தி மிகை & உபரிநிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற உயரியநோக்கிலும் ஒரே இடத்தில் நிலம் குவிக்கப்படுவதை தடுக்கவும், நிலஉச்சவரம்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.
2. 5 பேர்கொண்டகுடும்பத்திற்குஅதிகபட்சம் 15 தர ஏக்கர் நிலமும் அதற்குமேல் இருக்கும் ஒவ்வொரு குடும்ப நபருக்கு தலா 5 தர ஏக்கரும், சீதனச் சொத்தாக மருமகளுக்கு 10 தரஏக்கரும், வைத்து இருக்கலாம். மேலும் இவையெல்லாம் உள்ளடக்கி 1 குடும்பத்துக்கு 30 தரஏக்கர் வரை அவர்கள் நிலத்தைவைத்து இருக்கலாம் என்று சட்டம் முதலி ல்மத்திய அரசால் இயற்றப்பட்டது.
3. 1970-ல் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் நில உச்சவரம்பு சட்டம் நிர்ணயிக்கப்பட்ட 30 தரஏக்கரை குறைத்து 15 தரஏக்கர் என்று உச்சவரம்பின் அளவை குறைத்தார். இதனால் மீண்டும் அதிக நிலம் வைத்து இருப்பவர்கள் கட்டுபடுத்தப்பட்டார்கள் மிகதீவிரமாக உச்சவரம்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டு 1983-ம் ஆண்டு வரை நிலங்கள் மிகுதிகையக படுத்தப்பட்டது. சாதாரண ஏக்கரிலிருந்து தரஏக்கராக மாற்றுவதற்கான சூத்திரம் For Dry Land
For Wet Land
4. நான்கண்டவரை 1 தர ஏக்கர் சாதாரண ஏக்கரை விட கூடுதலாகத்தான் இருக்கிறதே தவிர குறைவாக இல்லை. இன்றைய நிலவரப் படி 15 தரஏக்கர் என்பது புன் செய்யாக இருப்பின், 40 சாதாரண ஏக்கரும் நன் செய்யாக இருப்பின், 25 சாதாரணஏக்கரும், மானாவாரியாக இருந்தால், புன்செய்யைவிடஇன்னும்அதிகமாகஇருக்கும். இவையெல்லாம் விவசாய ஆதாரத்தின் வருமான அடிப்படையில் நிலதீர்வையின் அடிப்படையில் வகைபடுத்தப்படுகிறது. அதற்கான பட்டியலைமேலே உள்ள அட்டவணையில் கொடுத்திருக்கிறேன்.
5. 40 சாதாரணஏக்கர், 25 சாதாரண ஏக்கர் அதிகபட்சம் உச்சவரம்பு என்பதே கடை நிலமனிதனுக்கு அபரிமிதமே. மேற்படி நிலங்களை வைத்து ஜமீன்கள், நிலகிழார்கள் நன்றாக நலவாழ்வு வாழலாம். ஆனால் நிலவரம்பு உச்சசட்டம் அமுலுக்கு வந்த பின் நாங்கள் வீழ்ந்து விட்டோம் என்று பெரிய நிலக்கிழார்கள் சொல்கிறார்கள், எப்படி என்று தான் தெரியவில்லை.
6. மடம், ஆதீனம் போன்ற சமய பொறுப்பு அமைப்புகள், தோட்டப் பயிர்பிரிவு, பல்கலைகழகங்கள், பழத்தோட்டங்கள், தோப்புகள், கரும்பு ஆலைகள், கால் நடை வளர்ப்பு பண்ணைகள் & பால்பண்ணைகள், அரசின் அனுமதியுடன் இயங்கும்தனியார் & அரசுகம் பெனிகளுக்கு நிலஉச்சவரம்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது (ஏன் என்று கேட்காதீர்கள்! கேட்டால் நிலமற்ற ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் ஆகிய நான் பொங்கோ பொங்கென்று பொங்கிவிடுவேன்).
7. உச்சவரம்பு சட்டம் 1961-இல் கொண்டு வந்தார்கள் தவிர, பெரும் அளவில் நிலம் கையகப்படுத்துதல் நடக்கவே விடவில்லை. எல்லா பண்ணையார்களும், ஜமீன்களுமே அரசு எந்திரத்தை கைப்பற்றிக்கொண்டு அதனை அவர்களுக்கு ஏற்றவாறு வளைத்து கொண்டு இருந்தார்கள் என்று யூகிக்கலாம்.
8. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வாழும் நிலக்கிழார்கள், தமிழகம் முழுவதும் இருந்த 74 ஜமீன்தார்கள், நூற்றுக்கணக்கான ஜாகீர்தாரர்கள், ஹாவெலி எஸ்டேட்காரர்கள், மிட்டாக்கள் மேற்படி காலகட்டங்களில் அபரிமிதமான தங்களின் சொத்துக்களை காப்பாற்றுவதற்காக, சர்க்கரை ஆலை தொடங்குவது, பல்கலைக்கழகங்கள் தொடங்குவது, அறக்கட்டளைகள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள் திறப்பது என தமிழக மக்களுக்கு பயன்படும் படியான காரியங்களைச் செய்து தங்களின் சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டனர். (மக்களை காப்பாற்றுவதற்காக மேற்படி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்று நம்பிவிடாதீர்கள். இன்று இருக்கும் பலவள்ளல்கள் நிலங்களை காப்பாற்றுவதற்காகதான் மக்கள் நலனுக்கான நிறுவனங்களை ஆரம்பித்து இருக்கிறார்கள்.)
9. தமிழ்நாடு அரசை பொறுத்த வரை 1 லட்சத்து 11 ஆயிரம் ஏக்கர் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உபரிநிலங்கள் என கண்டறியப்பட்டு அதில் 72 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மட்டும் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு விட்டது. மீதி 34 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்றும் நிலவருவாய் ஆவணங்களில் உச்சவரம்பு சட்டத்தில் தான் இருக்கிறது. இன்னும் மிகை நிலங்களை அரசு பெரும் நிலக்கிழார்களிடமிருந்து அரசுகைப் பற்றிக்கொண்டு வரவில்லை.
10. கையகப்படுத்தப்பட்ட 72 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், நிலமற்ற விவசாய மக்களுக்கு பிரித்து ஒப்படைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்தநிலங்களை மக்கள் “கலைஞர்பட்டா” நிலங்கள் என்றே அழைத்து கொண்டு இருப்பதை கேட்டு இருக்கிறேன்.
11. இன்றளவும் நிலஉச்ச வரம்பு சட்டம் நடைமுறையில் இருந்தாலும் மக்களுக்கு அதை பற்றிய விழிப்புணர்வுகள் இல்லை! 1990-க்கு பிறகு நாடு உலகமயமாக்கல் செயல்பாடுகளில் மூழ்கி சிறப்புப்பொருளா தாரமண்டலங்களுக்கு நிலங்கள் எடுத்துக்கொடுக்க வேண்டிய நிலைமையில், நில உச்சவரம்பு சட்டம் SEZ-ல் மேலோங்காத நிலையிலேஇருந்தன.
12. புதிதாக ஏக்கர் கணக்கில் இடம் வாங்கப்போவதாக இருந்தால் நாம் வாங்க போகும் நிலங்கள் அருகில் “கலைஞர்பட்டா”அல்லது இலவச ஒப்படை நிலங்கள் இருந்தால், அப்பகுதி அதற்கு முன்பு நிலஉச்சவரம்பில் கீழ் இருந்ததா? என்று சோதித்து கொண்டு சொத்தை வாங்குதல் நல்லது.
13. நிலஉச்ச வரம்பு சட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு நஷ்டஈடு அரசால் வழங்கபடுகிறது. அதில் முரண்பாடுகள், சிக்கல்கள் இருந்தாலும், உச்சவரம்பு சட்டத்தை அமுல் படுத்துவதில் நில உரிமையாளர்கள் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தினாலும் அதனை பற்றிவிசாரிக்க, தீர்வுகள் கொடுக்க நிலதீர்ப்பாயம் ஒன்று (Land Tribunal) இந்த சட்டத்தின் கீழ்அமைக்கப்பட்டு இருந்தது. தற்பொழுது அவை கலைக்கப்பட்டு அந்த வழக்குகளெல்லாம் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு சென்றுவிட்டது
14. இந்தசட்டத்திற்கு மாநில அளவில் நிலஆணையர், வனத்துறை தலைவர், நிலசீர்திருத்தங்கள் இயக்குனர் ஆகியோர் தலைமையில் தனிவாரியம் இயங்குகிறது.
15. மாவட்ட அளவில் மாவட்ட வருவாய் அலுவலரும், மேற்படி நில உச்சவரம்பை கவனித்து வந்தார். 2017-ம் ஆண்டு முதல் மேற்படி நிலஉச்சவரம்பு சட்ட நிலங்களை பராமரிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு பொறுப்பு ஒப்படைக்க ப்பட்டுள்ளது.
16. இப்பொழுது மீண்டும் அரசு ஆவணப்படி, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் உள்ளகையகப்படுத்தாத மிகை நிலங்களை குறித்த ஒரு தரப்பட்டியல் எடுத்துக்கொடுக்கு மாறு ஒவ்வொரு மாவட்டஆட்சியரிடம் இருந்து கிராமநிர்வாக அதிகாரிகளுக்கு ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளன.
17. மீண்டும் கிளம்பும் இந்த உச்சவரம்புசட்டத்தால் எடுக்கப்படும் மிகை நிலங்கள் யாருக்கு பயனளிக்கும் என்று பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.
பஞ்சமிநிலம் (DC LAND) என்பதைகண்டுபிடிப்பதுஎப்படி?
1. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட்டது தான் பஞ்சமிநிலம். மேற்படி நிலத்தை ஒடுக்கப்பட்ட மக்களைத்தவிர வேறுயாரும் வாங்ககூடாது. வாங்கினாலும் செல்லாது என்ற கண்டிசன் இன்று வரை சட்டத்தில் இருக்கிறது.
2. பல ஒடுக்கப்பட்ட அமைப்புகள் அதன் தலைவர்கள் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கு பல கட்டங்களாக போராடிக்கொண்டு இருப்பதை அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் பார்க்கமுடியும்.
3. வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐ.டி.யில் வேலை செய்யும் இளைஞர்கள் பலர் DC நிலங்களை வாங்கி அல்லல் படுகின்றனர். இனி அதனை வாங்காமல் தவிர்க்க DC நிலம் தான் என்பதை ஊர்ஜிதம் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?.
4. நீங்கள் நிலங்கள் வாங்கப்போகும் பகுதிகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் (பறையர், பள்ளர், அருந்ததியர்) மிகுதியாக இருக்கிறார்களா? என்று கவனித்தல் வேண்டும்.
5. பழையசர்ச்சுகள் அருகில் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். DC நிலங்கள் ஒடுக்கபட்டமக்களுக்கு பகிர்ந்தளிக் கமிஷினரிகள் அந்த காலத்தில் உதவி செய்தன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
6. வாங்கப்போகும் நிலத்தின் உரிமையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களா? அல்லது அதற்கு முந்தைய உரிமையாளர்கள் ஒடுக்கபட்டவர்களா? என்று ஆராய்தல் வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மேற்படி நிலம் DC நிலமா? என்று சோதித்தல் வேண்டும்.
7. வாங்கப் போகும் இடத்தை நீங்கள் ஒன்றுக்கு இரண்டு முறைசுற்றி வந்தாலே நிலவியாபரத்தை கெடுக்கவே சிலர் தேடி வந்து இது DC நிலம் என்று துப்பு கொடுப்பார்கள்.
8. பிறகு அதனை உறுதி செய்து கொள்ள வேண்டியது தான் உங்களது பணி. கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ள மேனுவல் அ-பதிவேடுகளில் கண்டிசன் நிலம், கிரையம் தடைசெய்யபட்டநிலம், DC நிலம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.
9. ஆன்-லைன் அ-பதிவேட்டில் இதெல்லாம் இருக்காது. எனவே எப்பொழுதும் மேனுவல் அ-பதிவேட்டை பாருங்கள். அதில் எந்த குறிப்பும் இல்லை என்றால் அவை பஞ்சமி நிலம் இல்லை என்று முடிவு செய்யலாம்.
10. இருந்தாலும் இன்னும் பஞ்சமிநிலம் என்று உங்களுக்கு பேச்சு அடிபடுகிறது என்றால் மாவட்டஆட்சியர் அலுவலகம் சென்று SLR மற்றும் RSLR ஆவணத்தை மனுசெய்து பெற்று, அதில் பஞ்சமி நிலம் பற்றிய என்று குறிப்பு இருக்கிறதா? என்று சோதித்தல் வேண்டும்.
11. பெரிய அளவில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்க போகிறீர்கள் என்றால் வட்டாட்சியர் இடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எந்தெந்த கிராமங்களில் எந்தெந்த சர்வே எண் பஞ்சமி நிலம் என்று தகவல்களை கேட்டும்பெறலாம்.
12. SLR, RSLR இல்லாத அந்த கால ஜமீன் மற்றும் இனாம் கிராமங்களில் UDR-க்கு முந்தைய அ-பதிவேட்டை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மனு செய்து பெறலாம்.
13. மேலே சொன்ன நத்தம் நில வரி திட்ட (UDR) யு.டி.ஆர் மேனுவல் அ-பதிவேடு SLR ஆவணம், RSLR ஆவணம் UDR-க்கு முந்தைய அ-பதிவேடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பெறப்படும் மாவட்ட கெஜட்டியர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்கிடைக்கின்ற தகவல்கள் ஆகியவற்றில் எதாவது ஒன்றில் பஞ்சமிநிலம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அந்த சொத்தை பஞ்சமிநிலம் என்று உறுதி செய்து கொண்டு அதனை வாங்காமல் தவிர்க்கலாம்.
பூமிதானஇயக்கநிலங்களைப்பற்றிதெரிந்துகொள்ள
வேண்டிய 29 உண்மைகள்!
1. காந்தியின் சீடரும் காந்தியவாதியுமான திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற நல்ல மனிதனின் சிந்தனையில், அனைத்து தரப்பு மக்களுக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். என்று தோன்றியிருக்கிறது. அதனால் அவர் உருவாக்கிய இயக்கம் தான்பூமிதான இயக்கம்.
2. துண்டு நிலம்கூட இல்லாத நிலமற்றமக்களுக்கு நிலங்களை மிகையாக வைத்திருக்கின்ற பண்ணையார்கள், ஜமீன்தார்கள், நிலக்கிழார்கள், தங்களுடைய நிலத்திலிருந்து ஒரு பகுதியை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள் அல்லது பூமிதானஇயக்கத்தினர் யாசகம்கேட்டு நிலத்தைப்பெறுவார்கள்.
3. மேற்படி தானம் கொடுத்தநிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் மற்றும் கூலிகளுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விவசாயம் செய்வதற்காக பிரித்து க்கொடுப்பார்கள் இந்த பூமிதான இயக்கத்தினர்.
4. அதன் படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956-ல் ஓராண்டு முழுவதும் தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமிகளை நிலக்கிழார்களிடம் இருந்துதானம் பெற்று அதனை நிலமற்ற மக்களுக்கு பகிந்தளித்தார். இப்படி இலட்சக்கணக்கான ஏக்கர்நிலங்களை நிலக்கிழார்களிடம் இருந்து தானம் பெற்று நில மற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
5. மேற்படி பூமிதானம் பெற்ற நிலங்களில் சிலஆயிரம் ஏக்கர் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படாமலேயே பூமிதான போர்டு வசம் உள்ளது. சில ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்டச்சிக்கல்கள் சட்டக் குழப்பங்களால், பூமிதான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்தபட முடியாமல் இருக்கிறது. இன்னும் சிலஆயிரம் ஏக்கர் லங்கள் தான் ஏழைமக்களின் பயன்பாட்டிற்கு தானமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
6. சரி எப்படி பூமிதானநிலங்களை அடையாளம் காண்பது? அந்தந்த பகுதிகளுக்கு சென்று தீரவிசாரித்தாலே பூமிதானநிலங்கள் எதுவென்று மக்களே அடையாளம் காட்டுவார்கள். இதற்கு மேனுவல் இசி பார்க்கும்போது 1950-களில் பூமிதானபோர்டுக்கு நிலங்களை தானபத்திரம் எழுதிக்கொடுத்திருந்த பதிவு வந்திருக்கும். அதனை வைத்து இதுபூமிதான இடம் என்று உறுதிபடுத்தலாம்.
7. மேலும் பூமிதான போர்டு பெயரில்பட்டா, சிட்டாஆகியவைமாறி இருந்தால் கிராமநிர்வாக அலுவலகஅ-பதிவேட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
8. பூமிதான நிலங்களை நிர்வ கிக்கபூமி தானபோர்டு என்ற அமைப்பு தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. பூமிதானபோர்டுக்கு நிலக்கிழார்கள் தானம் கொடுத்து அந்ததானம் கிரையப்பத்திரமாக பதியப்பட்டு போர்டு பெயருக்கு தனிப்பட்டா ஆனதும் மேற்படி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு போர்டு பகிர்ந்து கொடுக்கும்.
9. நிலங்களை பெறும் ஏழைபயனாளிகள் அனைத்து வகை சமுதாயத்தை சார்ந்தவர்களாக இருந்தார்கள். பூமிதானநிலங்கள் ஒடுக்கபட்ட SC & ST மக்களுக்கு தான் கொடுக்கப்பட்டது என்பது தவறான புரிதல். SC / ST மக்களுக்கு கொடுக்கப்பட்டது DC நிலம் (அ) பஞ்சமி நிலம் என்பர். பஞ்சமி நிலத்துக்கும் பூமிதானநிலத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
10. பூமிதான நிலத்தை பெற்ற பயனாளிகள் மேற்படி இடத்தை அடமானம், விற்பனை, தானம், ஒத்தி போன்ற எந்த வித பாராதீனமும் வில்லங்கமும் செய்யக்கூடாது.
11. தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குமேல் பூமிதானம்பெற்ற பயனாளிகள் நிலங்களை உழாமல் அனுபவிக்காமல் இருந்தால் அதனைபூமிதான போர்டு மீண்டும் கையகப்படுத்திவேறு பயனாளிகளுக்கு கொடுக்கின்ற உரிமை இருக்கின்றது.
12. பூமிதான நிலங்களின்பட்டா, பூமிதானம் பெற்ற பயனாளிகளின் பெயரில் இருக்காது. எப்பொழுதும் பூமிதானநிலத்தின் வருவாய் துறை கணக்கில் பூமிதானபோர்டு பெயரில்இடம் பெற்று இருக்கும்.
13. கோவில் நிலங்கள் போலகால மெல்லாம் அனுபவித்து கொள்ளலாம். பட்டா எப்பொழுதும் கோவில்பெயரில் இருப்பதைப்போல பூமிதானபோர்டு பெயரில்இருக்கும்.
14. மேற்படி பூமிதான போர்டு பெயரில் இருக்கும் பட்டாவிற்கு நிலத் தீர்வையை ஆண்டு தோறும்பூமி தானம் பெற்ற பயனாளிகள்தான் செலுத்தவேண்டும்.
15. பூமிதானம் பெற்ற வரின்வாரிசுகள் மேற்படி நிலத்தை வாரிசு உரிமையில் அனுபவிக்கலாம். ஆனால் தங்கள் பெயரை பூமிதான போர்டு ஆவணங்களில் சேர்க்க மனு செய்து சேர்த்துக் கொள்ளவேண்டும்.
16. பூமிதான நிலங்களில் சட்டச் சிக்கல்களும் குழப்பங்களும் எப்படி உருவாகின்றது என்று புரிந்து கொண்டாலே இன்றைய இளம் தலை முறையினர் பூமிதான நிலசிக்கல்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
17. பல ஊர்களில் வினோபாவே தானம் கேட்டுவரும் போது ஆர்வக்கோளாறுகளால் பூமிதானம் கொடுத்த பண்ணையார்கள் இருக்கிறார்கள். ஏற்கனவே சட்ட சிக்கல்கள் இருந்த நிலங்கள், பாகப்பிரிவினை பிரச்சனை, வாரிசுரிமை சண்டைநடக்கும் நிலங்கள், போன்றவற்றையெல்லாம் பூமிதான போர்டு பெயரிலேயே நிலக்கிழார்கள் தானம் கொடுத்துவிட்டனர்.
18. மேற் படி நிலங்கள் நீதிமன்றங்களில் வழக்குகள் ஆகிபூமிதானபோர்டு கையகப்படுத்தப் படாமலும், பட்டாவில் பெயரை பூமிதானபோர்டு பெயருக்கு மாற்றாமலும் நிலுவையிலேயே வைத்து இருக்கிறார்கள்.
19. பூமிதானபோர்டுக்கு நிலங்களை தானம் கொடுப்பவர் கிரையப்பத்திரம் போட்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் அனுபவத்தை போர்டுக்கு ஒப்படைக்காமலேயே இருந்து விடுவார்கள் அதாவது மேடையில் எல்லோர் முன்னிலையிலும் வினோபாவிடம் தானம் கொடுத்துவிட்டு, பிறகு வினோபாவே அந்த கிராமத்திலிருந்து சென்றவுடன்தானம் கொடுத்தவரின் வாரிசுகள் மற்றும் சகோதரர்கள் மேற்படி நிலதானத்தை ஆட்சேபித்து வழக்குகள் போட்டும், அனுபவத்தை ஒப்படைக்காமலும் இருந்திருக்கிறார்கள்.
20. அடுத்ததாக சிலகிராமங்களில் பூமிதான போர்டு பெயரில்கிரைய பத்திரம்ஆகி இருக்கும். ஆனால்போர்டு பெயரில்பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்து விடுவார்கள். அதனால் மேற்படி பட்டாவில்போர்டுக்கு தானம் கொடுத்தவர் பெயரே இருக்கும். அதன்பிறகு யு.டி.ஆருக்கு பட்டாமாறும் போதும் போர்டுக்கு தானம் கொடுத்தவரின் பெயரே ஏறி இருக்கும்.
இப்படி யு.டி.ஆர் பட்டாவிலேயே தானம்கொடுத்தவரின் பெயர் வந்திருப்பதால் தானம் கொடுத்தவர்களின் வாரிசுகள் செட்டில் மெண்ட், கிரையம் போன்ற பத்திரங்களை உருவாக்கி சட்டக் குழப்பமுள்ள நிலங்களாக ஆக்கிவிட்டனர்.
21. மேனுவல் பீரியர்டு EC காலத்தில் பூமிதானத்திற்கானபோர்டு பெயரில் கிரையப் பத்திரம் நடந்து இருக்கும். இப்பொழுது 1975-ல் இருந்து மட்டுமே கணினி EC கிடைக்கும். அதனை மட்டும் பார்த்து விட்டும், மேலும் ரெவின்யூ பட்டாதானம் கொடுத்த தனிநபர் பெயரிலே இருக்கிறது என்பதாலும் அந்ததெம்பிலே தங்களுடைய பணத்தைப்போட்டு வாங்கிவிடுகின்ற அதிகபிரசங்கிகளை கண்டு இருக்கிறேன்.
22. அதாவது பூமிதானபோர்டுக்கு தானம் அளிக்கப்பட்டு முழுமையாக போர்டின் கைகளுக்குகளத்திலும், அனுபவத்திலும், ஆவணங்களிலும் உரிமை மாறாமல் இருக்கும் இடங்களில்தான் அப்பாவி மக்கள் விவரம் தெரியாமல் தவறுதலாக சொத்தை வாங்கி விட்டு தவிக்கின்றனர். எனவே பூமிதானநிலங்கள் அருகில் இருக்கிறது அல்லது பூமிதானநிலமா? என்ற சந்தேகம் வந்தாலே நன்றாக ஆவணஆய்வு, கள ஆய்வுசெய்துமுடிவு எடுங்கள்.
23. பூமிதானபோர்டுக்கு நிலக்கிழார்கள்நிலங்களை தானம் கொடுக்கும் பொழுது போர்டுக்கு பத்திர அலுவலகத்தில் கிரையம் எழுதி கொடுப்பார்கள். அதனால் அந்த பரிமாற்றம் EC-யில் வரும். அதுவே பூமிதான போர்டு, ஏழை பயனாளிக்கு நிலத்தை வழங்கும் போது அதுதான கிரையபத்திரங்களாக சார்பதிவகத்தில் பதியமாட்டார்கள். எனவே EC-ல் ஏழை பயனாளிகளின் பெயர் வராது.
24. பூமிதான நிலங்களை ஏழைப்பயனாளிக்கு ஒப்படைக்கும் போது காந்தி-வினோபாவே & ஏர் உழவன் படம் போட்ட தனி முத்திரைத்தாளில் பதிவு செய்யாமல் சில கண்டிசன்களை மட்டும் எழுதி நிலத்தை ஒப்படைக்கின்ற சில ஷரத்துக்களை மட்டும் எழுதி ஏழை பயனாளிகளுக்கு ஒப்படைப்பார்கள்.
25. மேற்படி இந்த சிறப்பு முத்திரைத்தாளில் நிலவிநியோகப் பத்திரம் என்று எழுதியிருக்கும். பத்திர அலுவலகத்தில் இதனைபதிவு செய்யமாட்டார்கள். இன்னும் கிராமங்களில் உள்ள பழைய ஆட்கள் இதனை ஏர் உழவன் பட்டா என்று சொல்வார்கள். இந்த முத்திரைத்தாள் பதிவு துறையில் விற்பனைக்குக் கிடைக்காது.
26. மேற்படி நிலத்தையார் தானம் அளித்தார்களோ? அவர்களின் பெயரும் அந்த ஏர் உழவன் முத்திரைத்தாளில் குறிப்பிடப்பட்டு இருக்கும். மேலும் தானம் அளிக்கப்படவிருக்கும் சொத்து விவரம் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். (மேற்படி பூமிதான ஏர் உழவன் முத்திரைத்தாளின் நகல் இந்த புத்தகத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இலவச FREE PDF-ல் இணைக்கப்பட்டுள்ளது.)
27. பூமிதானபோர்டு நிலங்களை கண்காணிக்க பராமரிக்ககதர் துறை அமைச்சர் கீழே சமூகசேவகர்கள், சர்வோதய சங்கத்தினர்கள், பூமிதான நிலம் கொடுத்த நிலக்கிழார்களின் வாரிசுகள் ஆகியோரைக் கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நிர்வாக கமிட்டியை அமைப்பார்கள்.
28. பூமிதான போர்டில் தலைமையகம் 2006-க்கு முன் மதுரையில் இயங்கியது. அப்பொழுதுபோர்டு தனித்த நிறுவனமாக இயங்கியது. 2006-க்கு பிறகு போர்டை வருவாய்த்துறையின் நிலச்சீர்திருத்தத் துறைக்குக் கீழ் கொண்டு வரப்பட்டு போர்டின் தலைமையகம் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை அலுவலகத்தில் RT Iமூலம் நேரடியாக பூமிதானநிலங்களை ஆய்வு செய்திருக்கிறேன். ஓரளவுக்கு பழைய ஆவணங்களை சிறப்பாகபராமரிக்கிறார்கள்.
29. பூமிதானபோர்டு இன்னும் சிறப்பாக இயங்கினால் போர்டு நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கமுடியும். யாருமே அனுபவிக்காமல் இருக்கின்ற பூமிதான நிலங்களை களத்தில் நான் கண்டுள்ளேன். அவைகள் எல்லாம் நிலமற்ற ஏழைகளுக்கு பயன்படச் செய்யுமாறு தமிழக அரசினிடம் நான்வேண்டுகிறேன்.
உங்கள்நிலம் BIL நிலச்சிக்கல்களில் வருகிறதா?
1. பஞ்சமிநிலம், பூமிதானநிலம், அனாதீன நிலம், என்றெல்லாம் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதென்ன "BIL" நிலம் என்று நெற்றி சுருக்குகின்றீர்களா? "BIL" நிலத்தை பேச்சுவழக்கில் "ஙிலி" நிலம்எ ன்றே சொல்வார்கள். "BL" நிலம் என்ற வார்த்தைகளை கேட்டால் ஏதோ வக்கீலுக்கு படிச்ச நிலம் என்று குழப்பம் அடையாதீர்கள். "BIL" என்பதன் விரிவாக்கம் "Bought in Land" ஆகும்.
2. "BIL" நிலமும் ஒரு வகையான அரசின் அனா தீன நிலமே! அதாவது அரசுக்கு தொடர்ந்து யாரும் வரிகட்டாத பொழுது அல்லது கடன் கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் போனாலும், அரசுக்கு ஏதாவது ஒரு வகையில் தண்டம் கட்ட வேண்டி கட்டாமல் போனாலும்அரசுஅவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்யும்.
3. ஜப்தி என்பது அரசிற்கு கடன் கொடுக்க வேண்டிய நிலங்களை ஏலம் மூலம் விற்பனை நடத்தி அரசுக்கு வரவேண்டியபணத்தை மீட்டுகொள்ளுவது ஆகும். அப்படி ஏலம் நடைபெறுகையில் யாருமே ஏலம் எடுக்காத பொழுது அந்த இடத்தை சிறுதொகை கொடுத்து அரசே வாங்கி கொள்ளும். அதுவே ஙிஷீuரீலீt வீஸீலிணீஸீபீ ஆகும்.
4. அரசு ஜப்தியில் ஏலம் எடுக்கும் பொழுது ஒருசிறு ஏலத்தொகையை நிர்ணயிக்கும் அதனையும் அந்த ஏலத்தில் அரசு பணமாககட்டாது. அதனை வாராகடனில் வரவு வைத்துவிடும். (ஆக அரசு அந்த நிலத்தை கைகாசுபோட்டு எடுத்துகொள்ளாது என்று புரிந்து கொள்ளுங்கள்).
5. இப்படி அரசு வாங்கிய நிலத்தை 12 வருடம் "BIL" நிலம் என்றே வகைப்படுத்தி வைத்து இருக்கும். அந்த 12 வருடத்திற்குள் நிலத்தை இழந்தநபரோ, அல்லது அவரின் வாரிசுதாரர்களோ கட்டவேண்டிய தொகை மற்றும் தண்டம் எல்லாம் சேர்த்து பணத்தைக்கட்டி மீட்டுக்கொள்ளவாய்ப்பு இருக்கிறது.
6. அப்படி 12 வருடம் கழித்தும் அந்த இடம் மீட்கப்படவில்லை என்றால் அரசு அதனை தரிசுபுறம் போக்கு நிலவகையை மாற்றிவைத்து கொள்ளும். அதனை ஏலத்தரிசு என்றும் பேச்சு வழக்கில் சொல்வார்கள். அதன் பின்பு அதனை நிலமில்லாதவர்களுக்கு ஏலத்தரிசுகளை இரண்டு ஏக்கர், இரண்டு ஏக்கர் என பிரித்து அரசு இலவச ஒப்படை செய்யும்.
7. எனவே அரசு ஏலம் எடுத்ததில் இருந்து ஏலத்தரிசாக மாற்றும் வரை இருக்கின்ற 12 ஆண்டுகாலத்தில் அந்த நிலங்களைபி .ஐ.எல் ("BIL") என்று அழைப்பார்கள்.
8. மேற்படி "BIL" நிலங்களை நான் என்களவேலைகளில் திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு சுற்று வட்டார பகுதிகளில் நிறையபார்த்து இருக்கிறேன். இந்த பகுதிகளில் காவேரிராஜபுரம், வியாசபுரம் போன்ற கிராமங்களில் ஆயிரக் கணக்கான ஏக்கர் "BIL" நிலங்கள்இருக்கிறது. இந்த பகுதி ஆரம்பக்கால கட்டத்தில்ஆந்திர மாநிலத்திலும் இப்பொழுது தமிழ்நாடு மாநிலத்திலும் இருக்கிறது. மொழி வாரி மாநில எல்லை பிரச்சனை போராட்டத்தின் பொழுது, மேற்படி கிராமத்தில் இருக்கும் தெலுங்குபேசும் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து இருக்கிறார்கள்.
9. அப்பொழ&a