தமிழ் வழியில் இங்கிலீஷ் டைப்பிங் கற்றுக்கொள்ளுங்கள்

இனி இங்கிலீஷ் டைப்பிங் ரொம்ப ஈஸி

Ratings 4.81 / 5.00
தமிழ் வழியில் இங்கிலீஷ் டைப்பிங் கற்றுக்கொள்ளுங்கள்

What You Will Learn!

  • இங்கிலீஷ் டைப்பிங்கில் வல்லவராக திகழ்வீர்கள்
  • கம்ப்யூட்டர் கீபோர்டை முறையாக பயன்படுத்த தெரிந்து கொள்வீர்கள்
  • உங்கள் அலுவலக டாக்மெண்டை எளிதாகவும் விரைவாகவும் டைப் செய்ய கற்பீர்கள்
  • 10 நிமிடத்திற்குள்ளாகவே ஒரு ஏ4 தாள் அளவுக்கு உள்ள டாக்குமென்டை டைப் செய்ய கற்றுக்கொள்வீர்கள்
  • கம்ப்யூட்டர் கீபோர்ட் பயன்படுத்தும் பொழது எளிதாக இருப்பதை உணர்வீர்கள்
  • மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள், தங்கள் கோடிங்கில் மட்டும் கவனம் செலுத்தமுடியும். கீ போர்ட் எழுத்துக்களை தேடிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை
  • தமிழ் வழியில இங்கிலீஷ் ரொம்ப தெளிவாக கத்துக்கலாம்
  • தாய்மொழி கல்வியில் கற்பவர்கள் சீக்கரமே அந்த பாடங்கள் கற்கின்றனர் என ஓர் ஆய்வு கூறுகிறது

Description

வணக்கம்,

                     தற்பொழது அனைவரும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரும்பாலோருக்கு எப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவது இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்றப்படி ஏதாவது வழியை பின்பற்றி  டைப் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த கோர்ஸ்யில் உங்களுக்கு முறையாக இங்கலிஷ் டைப்பிங் எப்படி கற்று கொள்வது என சொல்லி தரப்பட்டு இருக்கிறது. நான் கம்ப்யூட்டர் பயிற்சியோடு, டைப் பயிற்சி மையமும் எங்கள் ஊரில்  நடத்தி கொண்டு இருப்பதால் என்னிடம் பயின்ற பல மாணவர்கள் டைப் ரைட்டிங் பயிற்சி பயின்று அரசாங்க சான்றிதழ் பெற்று பயடைந்துள்ளனர். இந்த பயிற்சியை நீங்கள் உங்கள் வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலேயோ தினமும் 30 நிமிடங்கள் நாள் ஒன்றுக்கு செலவிட்டால் போதுமானது. 15 நாட்களிலேயே தாங்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட் பயன்படுத்துவதில் வல்லவராக  திகழ்வீர்கள் என்று உறுதியுடன் கூற முடியும்.

                     இந்த பயிற்சி தமிழ் வழியில் கற்றுத் தரப்பட்டுள்ளது. தாய்மொழியில் எந்த கல்வியையும் கற்கும்பொழதும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதற்காகவே இந்த பயிற்சி நமது தாய்மொழி தமிழில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் கற்க விரும்புகிறவர்களுக்காக தனிக் கோர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் இங்கிலீஷ் டைப்பிங் பயிற்சி கற்க விரும்புகிறவர்கள் அதனை தேர்ந்தெடுத்து பார்த்து படித்து பயனடையுங்கள்.

                      இந்த பயிற்சியில் நான் இங்கிலீஷ் டைப் ரைட்டிங் மட்டும்  சொல்லித்தரவில்லை, கம்ப்யூட்டர் கீபோர்ட் பற்றிய விளக்கங்களையும் அதனுடைய செயல்பாடுகளையும் விவரித்துள்ளேன். ஏனெனில் கீபோர்ட் பற்றிய தெரிதல் இருந்தால் மட்டுமே நாம் கம்ப்யூட்டர் கீபோர்டை தன்னம்பிக்கையுடன் பணியாற்றமுடியும் என்று  அதைப் பற்றியும் விவரித்துள்ளேன்.

                      அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு உடனே சென்று விடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். முதல் பாடம் பார்த்தவுடன் உங்கள்  கம்ப்யூட்டரில் முதலில் நான் கூறியப்படி பயிற்சியை மேற்க்கொள்ளுங்கள். அந்த பயிற்சியை முடித்த பிறகே அடுத்த பாடத்திற்கு தாங்கள்  செல்லவேண்டும். அப்பொழதுதான்  முழுமையான பயிற்சியாக இருக்கும். அதை விடுத்து தாங்கள் அடுத்தடுத்த பயிற்சியை பார்த்திர்கள் என்றால் உங்களுக்கு இந்த  பயிற்சி பாடம் பயனளிக்காது. எனவே இந்த கோர்ஸ்ஸில் பயிற்சிதான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

                       இந்த கோர்ஸ்ஸில் 27 பாடங்களும்  மற்றும் 3 பிடிஎஃப் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் பயன்பட கூடிய ஒன்று. எங்கள் இந்த பயிற்சி பயனுடையதாக இருப்பதாக கருதினால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பயிற்சியை வாங்கி பயடைய செய்யுங்கள்

                        கடைசியாக, பயிற்சி மட்டுமே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றும். அதனால் கற்றலோடு நில்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள் உங்கள்  வேலைவாய்ப்பிற்கும், அலுவலக பணிகளுக்கும் இந்த பயிற்சி பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நன்றி

வாழ்த்துக்களுடன்,

க. சிவா

யுடிமி பயிற்சியாளர்


Who Should Attend!

  • யாரெல்லாம் கம்ப்யூட்டர் கீபோர்டில் வேகமாக டைப் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுக்கு இந்த பயிற்சி உகந்தது
  • உங்கள் மகன் மகள் பள்ளி மாணவராக இருந்தால் இந்த பயிற்சியை மேற்கொள்ள செய்யுங்கள் நாளை கணிணி வல்லுனாராக வருவதற்கு இந்த அடிப்படை பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்
  • நீங்கள் அலுவலக பணியாளர்களாக இருப்பீர்களானல் நீச்சயம் இந்த பயிற்சி உங்களுக்கானதுதான். உங்கள் டாக்மென்டேஷன் வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க இந்த பயிற்சி உங்களுக்கு பயன்படும்
  • எந்த வயதில் உள்ளவரும் இந்த பயிற்சி மேற்கொள்ளலாம் எளிதாக புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது
  • பள்ளி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் கம்ப்யூட்டர் துறையில் பிரகாசமான மின்ன இந்த அடிப்படை பயிற்சி கண்டிப்பாக தேவை
  • கணிணி துறையில் கோடிங் எழுதுகிறவர்களும் இந்த பயிற்சி மேற்கொள்ளுங்கள். அப்பொழதுதான் நீங்கள் ப்ரோகிராமில் உங்கள் கவனம் இருக்கும். கீபோர்ட் எழத்துக்களை தேடிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

TAKE THIS COURSE

Tags

  • Typing

Subscribers

78

Lectures

27

TAKE THIS COURSE



Related Courses