Learn Scratch programming in Tamil

Scratch programming - தமிழில் கற்றுக்கொள்ளுங்கள்

Ratings 5.00 / 5.00
Learn Scratch programming in Tamil

What You Will Learn!

  • Scratch ஒரு அறிமுகம்
  • Scratch-ல் ஒரு project-ஐ உருவாக்குதல்
  • Scratch-ல் இருக்கும் பகுதிகள் மற்றும் அவற்றின் பயன்கள்
  • vector / bitmap mode-ல் வரைவது எப்படி?
  • Scratch code வகைகள் (Motion,Looks,Events,Control,Sensing,Operators,Variables,My Blocks)
  • Scratch code extensions - Pen (பேனா), Music (இசை)
  • Costumes-ஐ பயன்படுத்தி எப்படி animations-ஐ உருவாக்குவது
  • Scratch விளையாட்டை உருவாக்குவோம்

Description

இந்த பாடத்தின் மூலம் Scratch என்று அழைக்கப்படும் சிறார்களுக்கான ஆரம்பநிலை programming language-ஐ கற்று, செயல்முறை பயிற்சிகளை செய்து, அதனை தெளிவாக புரிந்துகொள்ளலாம். இது Scratch Foundation எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. Scratch, உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும், 60-க்கும் மேற்பட்ட மொழிகளில், Scratch Foundation-ன் ஆதரவுடன், இலவசமாக தன் சேவையை வழங்குகின்றது. Scratch-ஐ பயன்படுத்தி animations, விளையாட்டுகள் மற்றும் கதைகளை, Scratch-ல் வழங்கப்படும் code blocks-ஐ பயன்படுத்தி, எளிதாக program செய்ய முடியும். Scratch-ஐ பயன்படுத்தி அனைவரும் ஒரு programming language-ல் உள்ள அடிப்படைகளை எளிதாக கற்றுக் கொள்ள முடியும். கணினி துறையில் பயிற்சி இல்லாதவர்களும் இதை பயன்படுத்தி, எளிதான இணையதள செயலிகளை செய்வதுடன், அதேநேரத்தில், programming language-க்கு தேவையான அடிப்படைகளையும் கற்றுக் கொள்ளலாம்.

இந்த பாடத்தில் முதலில் Scratch-ஐ பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தை பெற்றுவிட்டு, Scratch-ல் இருக்கும் Stage, Sprites, Code போன்ற பகுதிகளில் இருப்பவற்றை பற்றியும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கமாக பார்க்க இருக்கிறோம். அதன் பின்னர் programming செய்ய தேவையான code block வகைகளான Motion, Looks, Events, Control, Sensing, Operators, Variables போன்றவற்றை எப்படி பயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம். அதேபோல Scratch-ல் வழங்கப்படும் Extension வகைகளான Music Extension-ஐ எப்படி பயன்படுத்தி ஒரு இசையை இசைப்பது, Pen Extension-ஐ பயன்படுத்தி எப்படி திரையில் வரைவது என்பதையும் பார்க்க இருக்கிறோம். இறுதியாக, நாம் கற்றுக்கொண்டவற்றை பயன்படுத்தி, எளிதாக ஒரு விளையாட்டை எவ்வாறு வடிவமைப்பது, என்பதையும் பார்க்கலாம்.

நீங்கள் ஆரம்பநிலை programming language-ஐ தெரிந்துகொள்ள விரும்பினால், இது கண்டிப்பாக உங்களுக்கான ஒரு பாடத்தொகுப்பு. இதை என்னால் முடிந்தவரை தமிழில் தர முயற்சி செய்திருக்கிறேன். தவிர்க்க முடியாத இடங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப வார்த்தைகளை, அப்படியே ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறேன். அது Scratch-ஐ பயன்படுத்த, உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாருங்கள்! தொடர்ந்து பார்க்கலாம்.

Who Should Attend!

  • தமிழ் மொழியில் Scratch programming-ஐ கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கான பாடத்திட்டம்.

TAKE THIS COURSE

Tags

  • Scratch Programming

Subscribers

7

Lectures

25

TAKE THIS COURSE



Related Courses